பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 瓣 10 歌 வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம் உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார் வள்ளற் குணத்தார் திருப்பவனி - வந்தார் என்றார் அம்மொழியை விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே (1) கான இனியார் என்இரண்டு கண்கள் அனையார் கடல்விடத்தை ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் ஒற்றித் தியாகப் பெருமானார் மான வீதி வருகின்றார் என்றார் கான வருமுன்நான் நான எனைவிட் டென்மனந்த்ான் நயந்தங் கவர்முன் சென்றதுவே, (4) கண்ணார் துதலார் மணிகண்டர் கனக வரையாங் கனசிலையார் பொண்ணார் பாகர் தியாகர்எனப் பேசும் அருமைப் பெருமானார் நண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் சார்ந்தார் பவனி என்றனர்நான் நண்ணா முன்னம் என்மனந்தான் நாடி அவர்முன் சென்றதுவே (8) வியப்புணர்ச்சி ததும்பி நிற்கும் பாடல்கள் இவை; பாடல்களில் ஆழங்கால்பட்டு அநுபவிக்கும்போது நாமும் தலைவி நிலையை எய்தி விடுகின்றோம். 84. திருவுலாத்திறம் திருஒற்றியூர் பெருமான் உலாக் காட்சியைக் கண்ட தலைவி தன் உள்ளத்தை அதில் பறிகொடுத்து விட்டதால் உறக்கம் கொள்ள