பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 錄 105 器 கற்றைச் சடைமேல் கங்கைதனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினர் பொற்றைப் பெருவில் படைஉடையார் பொழில்கும் ஒற்றிப் புண்ணியனார் இற்றைக் கடியேன் பள்ளியறைக் கெய்து வாரோ எய்தாரோ சுற்றுங் கருங்கட் குறமடவாய் குழ்ந்தார் குறிநீ சொல்லுவையே. (10) என்பன இப்பதிகத்தில் மூன்று பாடல்கள். ஒவ்வொரு பாடலும் குறத்தியைக் குறி சொல்லுமாறு வேண்டுவ தாக அமைந்துள்ளது. பாடல்களைப் பயிலும் நாமும் தலைமகள் நிலையில் குறத்தியைக் குறி கேட்கும் உணர் வைப் பெறுகின்றோம். 88. காட்சி அற்புதம்: நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்களின் மனத்தில் ஒரிரு கண நேரத்தில் இறை வன் காட்சி தந்து மறைகின்றான். அந்தக் காட்சியை மீட்டுக் காண ஆசைப்படுகின்றது அவர்கள் திருவுள் ளம். அந்த ஏக்கம் தானான தன்மையிலும் நாயகியான நிலையிலும் பாடல்களாக மலர்கின்றது. இங்ங்னமே அடிகளின் மனத்தில் காட்சி தந்த ஒற்றியூர்ப் பெருமான் காட்சியை நினைவு கூரவே ஏக்கப் பாடல்கள் பிறக்கின் றன. அங்ங்னம் தோன்றியதே இப்பதிகம். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. தலைவி தோழியிடம் இரங் கிக் கூறுவனவாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பூனா அணிபூண் புயமுடையார் பொன்னம் பலத்தார் பொங்குவிடம் ஊணா உவந்தார் திருஒற்றி பூர்வாழ் வுடையார் உண்மைசொலி