பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

峰 106 家 இராமலிங்க அடிகள் நீணால் இருந்தார் அவர்இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே கான தயர்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே (1) ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் ஆதி நடுவி றாகிநின்றார் நீல மிடற்றார் திருஒற்றி நியமத் தெதிரே நீற்றுருவக் கோல நிகழக் கண்டேன்பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும் காலம் அறியேன் எண்ணடிநான் கனவோ நனவோ கண்டதுவே. (7) நிரந்தார் கங்கை நீள்சடையார் நெற்றி விழியார் நித்தியனார் சிரந்தார் ஆகப் புயத்தணிவார் திருவாழ் ஒற்றித் தியாகர்.அவர் பரந்தார் கோயிற் கெதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன் கரந்தார் கலுழ்ந்தேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே (10) எல்லாப் பாடல்களிலும் தோழியை விழித்து என் னடி நான் கனவோ நனவோ கண்டதுவே என்று முடிகின்றன. 90. திருக்கோலச்சிறப்பு: திருஒற்றியூர் இறைவன் திருவுலாக் காட்சியைக் கண்ட தலைவி அவனது திருக் கோலச் சிறப்பைக் கண்டு வாய்ப்பெய்தியதாகப் பாடல் கள் அமைகின்றன. பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்துள்ளன. பத்துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம்.