பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நான்காந்திருமுறைப் பாடல்கள் இத்திருமுறையில் 41 பதிகங்கள் அடக்கம். இவற்றுள் அடங்கிய பாடல்கள் 458. இத்திருமுறையில் பதினொரு அகப்பொருட் பதிகங்கள் உள்ளன; அவற் றின் பாடல் தொகை 78. இனித் திருமுறையில் உள்ள சில பதிகங்களையும் அவற்றுள் அடங்கிய பாடல்களை யும் காண்டோம், அகப்பொருட்பதிகங்களின் பாடல் களைத் தனியாகக் காண்டோம். 2. போற்றித் திருப்பதிகம்: இறைவனைப் போற்றும் பாங்கில் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப் டால் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டவை இப்பதிகம். பாடியவாய் தேனுாறும் சில பாடல்களில் உளங்கரைவோம். அருள்தரல் வேண்டும் போற்றிஎன் அரசே அடியனேன் மனத்தகத் தெழுந்த இருள்கெடல் வேண்டும் போற்றிஎன் தாயே ஏழையேன் நின்றனைப் பாடும் தெருள் உறல் வேண்டும் போற்றிஎன் அறிவே சிந்தைநைத் துலகிடை மயங்கும் மருள்அறல் வேண்டும் போற்றிஎன் குருவே மதிநதி வளர்சடை மணியே (1) போற்றுவார் உள்ளம் புகுத்தொளிர் ஒளியாய் போற்றிதின் பூம்பதம் போற்றி ஆற்றுவார் சடைஎன் அப்பனே போற்றி அமலநின் அடிமலர் போற்றி