பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

米 190 零 இராமலிங்க அடிகள் வற்றின் எண்களும் ஒருவகைக் கணக்கில் அமைய வில்லை. ஒரே பதிகத்திலேயே பல வகை யாப்பு வகைகளும் சந்த வகைகளும் அமைந்தன. இத்தகைய பண்புகளை வள்ளல் பெருமான் பாடல்களில் காண முடிகின்றது. அகப்பொருட் பதிகங்கள் இவை பத்துப் பதிகங்கள். அவை வருமாறு: 25. நடராஜ அலங்காரம் 3 பாடல்கள் 26. பாங்கிமார் கண்ணி 27 பாடல்கள் 32. தோழியர் உரையாடல் 6 பாடல்கள் 33. தெண்டனிட்டேன் 9 பாடல்கள் 34. இன்னந்தயவு வரவில்லையா 7 பாடல்கள் 35. வினாவிடை 3 பாடல்கள் 36. நற்றாய் கவன்றது 9 பாடல்கள் 37. சல்லாப லகரி 2 பாடல்கள் 38. தலைமகள் முன்னமுடிபு 10 பாடல்கள் 39. வேட்கைக் கொத்து 10 பாடல்கள் இவை தவிர தனித்திருவிருத்தம் என்பதில் 2 பாடல் கள் (55,56) அகத்துறையைச் சார்ந்தவை. இனி இவற்றி லுள்ள பாடல்களை நோக்குவோம். 25. நடராஜ அலங்காரம்: இதில் அடங்கியவை மூன்று பாடல்கள். அவற்றுள், இரண்டே காற்கை முகந்தந்திர இன்ப நடஞ்செய் பெருமானர் இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன் இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனக்கென் றிங்கேநீ