பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 家 239 ※ நெட்டிலை அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே (5) தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன்றறியேன் கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதியே கருத்தேன் பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே (8) வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் ஓட்டைச் சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் தயவிலேன் குதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம்வெறுக் கச்செய் எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் என்னினும் காத்தருள் எனையே (9) பாடல்கள் யாவும் சரணாகதி தத்துவம்போல் அமைந் துள்னள. இவை நம்மால் மனம் கரைந்து ஒதப் பெற் றால் நாமும் நற்கதிக்குத் தள்ளப் பெறுவோம். 9. அவா அறுத்தல்: தாம் உண்டு கொழுத்த நண்டு போல் இருந்து உலகியல் நிக்ழ்ச்சிகளில் மண்டிக்கிடப்ப தாகவும், ஆயினும் இறைவனையே முக்காலும் அண் டியே இருப்பதாகவும், ஆதலால் தம்மைக் கைவிடாது காக்க வேண்டும் என்று மன்றாடுவதாகவும் அமைந்த பதின்மூன்று பாடல்களைக் கொண்டது இப்பதிகம். பாடல்கள் யாவும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. சில பாடல்களில் ஆழங்கால் படுவோம்.