பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 零 25 5 苓 எமன்னனும் அவன்.இனி இலைஇலை மகனே எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனிநட ராசஎன் சற்குரு மணியே (18) ஆதியும் அந்தமும் இன்றிஒன்றாகி அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே ஒதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே உளங்கொள்கிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச் சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனிநட ராசஎன் சற்குரு மணியே (20) கற்பனை முழுதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண் டினிக்கின்ற கற்பகக் கனியே அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா அருள்நிலை தனில்உற அருளிய அமுதே பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே பதமலர் முடிமிசைப் பதித்தமெய்ப் பதியே தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனிநட ராசஎன் சற்குரு மணியே (22) அறியாமல் ஆகின்ற அறிவினுள் அறிவே அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே பிேறவாமல் இறவாமல் எனைவைத்த பெருக்கே தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே தனிநட ராசஎன் சற்குரு மணியே (23) கருதாமல் கருதும்ஒர் கருத்தினுட் கருத்தே காணாமல் காணும்ஒர் காட்சியின் விளைவே எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே இறவாத வரமுந்தத் தருளிய ஒளியே