பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 器 il 器 அடிகளாரின் அருள் வாழ்வில் கந்தகோட்டம் சரியை, ஒற்றியூர் - கிரியை, தில்லை - யோகம்; வடலூர் - ஞானம். இதவும் ஒருவகையான படிமுறையே. அடிக ளார் தம்மைச் சிறுகாலை ஆட்கொண்ட பெருமானை, ஆறுமுகப் பெருங்கருணைக் கடலே தெய்வ யானைமகிழ் மகிழ்குன்றே அரசே முக்கட் பேறுமுகப் பெருஞ்சுடர்க்குட் சுடரே செவ்வேல் பிடித்தருளும் பெருந்தகையே பிரம ஞானம் வீறுமுகப் பெருங்குணத்தோர் இதயத் தோங்கும் விளக்கமே ஆனந்த வெள்ள மேமுன் தேறுமுகப் பெரியஅருட் குருவாய் என்னைச் சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவே - முதல் திருவருள் திருவிலாசப் பத்து - 1 என்று சிறப்பிப்பர். இதன் 4ஆம் பாடலும் இம்முறையி லேயே நடைபெறுகின்றது. (10) கனவில் காட்டுதல்: மணிவாசகப் பெருமானுக் காகக் கொண்ட குதிரைச் சேவகர் கோலத்தைத் தன் கனவிலேனும் காட்டுமாறு வேண்டுவர். திருவாத ஆருரம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே வெருவாத வைதிகப்பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற, ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவிலே - 3 திருவருண் முறையீடு - 134 இங்ங்னம் அடிகளின் வேண்டுகோட்கினங்க இறை வன் பல காட்சிகளை கனவிலும் அருளினான்; நனவி லும் அருளினான். -