பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 岑 283 零 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாலான பத் துப் பாடல்களைக் கொண்டது. வள்ளல் பெருமான் இவற்றைப் பாடிப் பேரின்பம் அடைகின்றார். இவற் றுள் ஐந்து: கருணைமா நிதியே என்னிரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ தருனவான் அமுதே என்பெருந் தாயே தந்தையே தந்தையே என்கோ தெருள்நிறை மதியே என்குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ அருள்நிறை தரும்என் அருட்பெருஞ் சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே (1) துன்பெலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுட் சோதியே என்கோ அன்பெலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ இன்பெலாம் புரிந்த இறைவனே என்கோ என்உயிர்க் கின்அமு. தென்கோ என்டொலர மணியே என்கனே என்கோ என்னுயிர் நாதநின்ற னையே (3) தாயனே எனது தாதையே ஒருமைத் தலைவனே தலைவனே என்கோ பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த பெருந்தகைப் பெரும்பதி என்கோ சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ சித்தெலாம் வல்லசித் தென்கோ தூயனே எனது நேயனே என்கோ சோதியுட் சோதிதின் றனையே (5) தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ