பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹 3O8 笨 இராமலிங்க அடிகள் வள்ளல்வரு தருணம்.இது தருணம்.இதே என்று வகுத்துரைத்துத் தெரிந்திடுக மயக்கம்அணுத் துணையும் கொள்ளலைஎன் குருநாதன் அருட்சோதிப் பெருமான் குறிப்பிதுஎன் குறிப்பெனவும் குறியாதே கண்டாய் நள்ளுலகில் இனிநாளைக் குரைத்தும்எனத் தாழ்க்கேல் நாளைதொட்டு நமக்கொழியா ஞானநடக் களிப்பே (6) ஏதும்அறி யாச்சிறிய பயல்களினும் சிறியேன் இப்பெரிய வார்த்தைதனக் கியானார்என் இறைவன் ஒதுகநீ என்னபடி ஒதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம்ா துணர்ந்திடுக நமது தீதுமுழு தும்தவிர்த்தே சித்தினலாம் அளிக்கத் திருவருளாம் பெருஞ்சோதி அப்பன்வரு தருணம் ஈதிதுவே என்றுலகம் அறியவிரைந் துரைப்பாய் எல்லாரும் களிப்படைந்துள் இசைந்தேத்தி யிடவே (9) தனித்தலைவன் எல்லாஞ்செய் வல்லசித்தன் ஞான சபைத்தலைவன் என்உளத்தே தனித்திருந்துள் உணர்த்தக் கனித்தஉளத் தொடும்.உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதைஓர் கதைஎனநீ நினையேல்மெய்க் கருத்துரைஎன்றறிக இனித்தஅருட் பெருஞ்சோதி ஆனைஎல்லாம் உடைய இறைவன்வரு தருணம்.இது சத்தியமாம் இதனைப் பனித்தவுல கவர்அறிந்தே உய்யும்வகை இன்னே பகர்ந்திடுக நாளைஅருட் பரமசுகச் சாறே (10) இந்த நான்கு பாடல்களையும் உணர்வுடன் உளங் கரைந்து ஒதினால் நாமும் இறைவரவு உணரலாம். 106. திருப்பள்ளி எழுச்சி: இந்தத் தலைப்பை அணுகி யவுடன் பல கருத்துகள் படலம் படலமாக நம் சிந்தை யில் குமிழியிடுகின்றன. இது இறைவனைப் பள்ளி எழுந்தருள வேண்டிக் கொள்ளுதல். இதனை முதன் முதல் பாடினவர் மணிவாசகப் பெருமான். திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி (20-வது பதிகம்) காண்க. இவரை அடுத்து தொண்டரடிப் பொடியாழ்வார் இதே தலைப்