பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

播 320 轰 இராமலிங்க அடிகள் இப்பகுதியில் பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடி லடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இவற்றுள் சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். இறைவன் பெருமையை பேசுவது அவனது திருவடிப் பெருமை யைப் பேசுவதற்கொப்பாகும். சில பாடல்கள் இரண் டையும் தனித்தனியாகப் பேசுகின்றன. பாடல்கள் யாவும் தோழியை நோக்கிப் பேசுவதாக அமைந்துள் gf@了。 திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய தருள்வார் தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார் உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம் பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால் துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததை என்சொல்வேன் சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி (1) இப்பாடல் இறைவனின் பெருமையைப் பொதுவில் பேசுவது. இப்படிப் பல பாடல்கள். திருச்சிற்றம் பலத்தின்பத் திருஉருக்கொண் டருளாம் திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்