பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 举 333 锚 காதல்.கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ கண்டுகொள்ள கணவனே என்றாள் ஒதலுன் புகழே அன்றிநான் ஒன்றும் உவந்திலேன் உண்மையி தென்றாள் பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த பிழையெலாம் பொறுத்தருள் என்றாள் மாதய வுடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே (1) பூமியோ பொருளே விரும்பிலேன் உன்னைப் புணர்ந்திட விரும்பினேன் என்றாள காமிளன் றெனைநீ கைவிடேல் காமக் கருத்தெனக் கில்லைகாண் என்றாள் சாமிநீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றுநான் தரித்திடேன் என்றாள் மாமிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினாள் நான்பெற்ற மகளே (4) மெலிந்தஎன் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் நலிந்தபோ தின்னும் பார்த்தும்என் றிருத்தல் நல்லவர்க் கடுப்பதோ என்றாள் மலிந்த இவ்வுலகம் வாய்ப்பதர் தூற்ற வைத்தல்உன் மரபல என்றாள் வலிந்தெனைக் கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே (5) இப்பாடல்களில் அடிகள் 'நற்றாய் கூற்றாக தன் பக்திக் காதலைத் தெரிவிக்கின்றார் வலிந்தெனைக் கலந்த வள்ளலே’ என்பதனால் இயற்கைப் புணர்ச்சி’ நடைபெற்று விட்டதை உறுதிப் படுத்துகின்றாள். 59. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்: இதில் தோழி கூற்றாக தலைவியின் (அடிகளின்) பக்திநிலை தெரிவிக் கப் பெறுகின்றது. இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் பத்துப் பாடல்கள் உள்ளன.