பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 器 主9 簿 வும் அடிகள் தனித் திருப்பதற்காகவும் இவ்வாறு கருங் குழியை விட்டு அயலிடங்களில் அவ்வப்போது சில காலம் தங்குவதுண்டு. 2. சிங்கபுரிக் கந்தரைப் பாடியது: குறிஞ்சிப்பாடிக் கடுத்துள்ள சிங்கபுரிக் கந்தர்மீது ஒரு பதிகம் பாடியுள் ளார் (1864). நோயை நீக்க வேண்டுமென்று இப்பாடல் கள் வேண்டுகின்றன. தமையனார் வழிபாட்டிற்காக அடிகள் இப்பாடல்களை ஆக்கியிருக்கலாம். இப்பாடல் கள் மூன்றாம் திருமுறையில் 21வது தலைப்பில் அடக் do [s], 3. கல்பட்டு சுவாமிகளை ஆட்கொள்ளல். தென்னார்க் காடு மாவட்டம் திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவ லூரிலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் 'திருநறுங் குன்றம்’ என்றோர் ஊரில் உள்ள சிறுகுன்று ஒன்றில் கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் என்று ஒருவர் இருந் தார். தம்மைக் குருநாதரே வலிய வந்து ஆட்கொள்ள வேண்டும் என்று காத்திருந்த இவரை அடிகள் அவர் இருப்பிடம் சென்று அவரை ஆட்கொண்டு தம்முடன் கருங்குழிக்கு அழைத்து வந்தார்கள் (1868க்கு முன் னர்). வடலூரில் சிறப்பான உபதேசங்களை சன்மார்க்க அன்பர்களுக்கு அருளிய காலத்தில் இவரையும் அழைப்பதாக வழக்கம் இருந்ததாகச் சொல்வர். 6. சிதம்பரம் வழிபாடு: இத்திருத்தலம் பழம் பெருமை வாய்ந்தது. 'கோயில்’ என்றே சைவப் பெரு மக்களால் வழங்கப் பெறுவது. பஞ்சபூதத் தலங்க ளுள் இஃது ஆகாயத் தலம். இருசமயக் கடவுள் 6. சித் அம்பரம் - சிதம்பரம், சித் - அறிவு அம்பரம் ஆகாயம். சிதம்பரம் - ஞானாகாசம், சிதாகாசம். • . . . . . ." х . 7. வைணவர்கள் திருவரங்கத்தைக் கோயில் என வழங்குவர்.