பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篆 56 添 இராமலிங்க அடிகள் அணியாக நின்ற அருட்செல்வ மேதனி காசலனே அணிஆ தவன்முத லாம்அட்ட மூர்த்தம் அடைந்தவனே. (26) அடையாத வஞ்சகர் பால்சென்று இரந்திங்கு அலைந்தலைந்தே கடையான நாய்க்குஉன் கருணைஉண் டோதணி கைக்குள்நின்றே உடையாத நல்நெஞ்சர்க்கு உண்மையைக் காண்பிக்கும் உத்தமனே படையாத தேவர் சிறைமீட்டு அளித்தருள் பண்னவனே. (27) சொல்லார் மலர்புனை அன்பகத் - தோர்க்குஅருள் சொல்லும்எல்லாம் வல்லாய்என்று ஏத்த அறிந்தேன் இனி.என்றன் வல்வினைகள் எல்லாம் விடைகொண்டு இரியும்என் மேல்இய மன்சினமும் செல்லாது காண்ஐய னேதணி காசலச் சீர்அரசே (30) பாடல்கள் அனைத்தும் உள்ளத்தை உருக்குபவை. கந்தர் அலங்காரச் சாயல் படிந்தவைபோல் காணப் பெறுகின்றன. பாடிய வாய் தேனுறும் பான்மையுடை ᏓLᏗ ←Ꭳéai . 6. குறை இரந்த பத்து: இதில் பத்துப் பாடல்கள் அடக்கம். அனைத்தும் கல்நெஞ்சத்தையும் கரைத்து உருகச் செய்பவை. ஒன்றிரண்டு காட்டுவேன். அனைத் தும் எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தயாப்பில் அமைந்தவை. - - - - -