பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鄒 76 發 இராமலிங்க அடிகள் என்பவை இரண்டு பாடல்கள். உலக வாழ்க்கையில் படும் அச்சத்தால் பேதுறும் அடிகள் இறைவனை இரங்கி வேண்டுவதைப் பாடல்களில் காண்கின்றோம். 9. அருளியல் வினாவல்: இது திருமுல்லைவாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை நோக்கி வினவுவதாக அமைந்த பதிகம். எழுசீர்க் கழி நெடிலாசிரிய விருத்தங்கள் பத்தைக் கொண்டது. இத னுள் இரண்டு பாடல்கள்: தேன்என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான்என நிற்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே ஊன்என நின்ற உணர்விலேன் எனினும் உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏன் எனக் கேளா திருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ (1) முன்னிய மறையின் முடிவின்உட் பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா மன்னிய கருணை வாரியே முல்லை வாயில்வாழ் மாசிலாமணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்தன் அரும்பெரும் கோயில்வந் தடைந்தால் என்.இது சிவனே பகைவரைப் போல்பார்த்து இருப்பதுன் திருவருட் கியல்போ (7) ஒர் இல்லத்தில் வந்து இரக்கும் எளியன்போல, திருமுல் லைவாயில் வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் இறை வன் திருவருளை வேண்டுகின்றார் அடிகள். - 10. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்: இது கலி விருத்தத்தாலான பத்துப் பாடல்களைக் கொண்டது.