100 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் மதியாது விடினும், இவர்கள் படைக்கலங்களைப் பற்றி வீரனாகிய நீ அறிந்திருக்க வேண்டும். இவர்களது அம்பறாத்துணியிலுள்ள பகழிகள் உலகையே நக்கி அழிக்கும் பாம்பு போன்றவை. ஆலகாலவிடத்தை ஒத்த விடத்தைக் கக்குபவை: நல்லோர்க்கு அழிவு செய்யும் தீயோரை அழித்து அவரை இரையாகக் கொள்வதன்றி வேறு உணவு பெறாதவை. "அவ்வம்புகளின் சக்தியை நீ அறியவேண்டின், அதிக முயற்சியின்றி அறியலாம். தேவ அசுரர்களால் கடைய இயலாத பாற்கடலைக் கடைந்த வாலியின் மார்பைப் பிளந்தவை அவ்வம்புகள்தாம். அம்மட்டோ? உலகையே வளைந்து கவிந்திருந்த மராமரங்கள் அழிந்ததும் அவ்வம்புகளாற்றான். விராதன், கரன் முதலியோரின் மலைகளை ஒத்த சிரங்கள் கீழே உருண்டமையும் அவற்றால்தான். இவற்றையெல்லாம் கண்டபிறகு, இவர்கட்குப் பகைவர் என்று இனித் தோன்றுகிறவர் விண்ணையே அடைவர் என்பதும் கூறவேண்டுமோ?" இவ்வாறு பகைவரைப்பற்றி அறியவேண்டிய கருத்துகளையெல்லாம் எடுத்து அழகாகக் கூறினான். இதுவரை கூறிய சொற்கள் அனைத்தும் இராவணனிடத்திலுள்ள நல்ல அறிவிற்கும், விவகார ஞானத்திற்கும், வீர உணர்ச்சிக்கும் இலக்காகக் கூறப் பட்டவை. முன்னர்க் காட்டிய மூன்று காரணங்களும் அறிவுடைய எவனும் ஆராய்வதற்குரியவை. அடுத்து வந்த வரலாற்றுப் பகுதி, போர் செய்கிற ஒவ்வொரு வனும் பகைவனை நன்கு அறிந்திருக்கவேண்டும் என்ற சாதாரணப் போர்முறைத் தந்திரத்தை அடிப்படை யாகக் கொண்டெழுந்தது. .
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/117
Appearance