பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 101 இதுவரை கூறியவற்றான் இராவணன் மனத்தில் ஆராய்ச்சி பிறக்கவில்லை என்பதைத் தன் கூர்த்த மதியால் நன்குணர்ந்த வீடணன், தனது விவகாரத்தை மாற்றுகிறான்; பகைவனைப்பற்றியே ஒயாது கூறி இராவணன் வெறுப்புக்கு ஆளாகாது, அவனது கருணைக்கு முறையிடுபவன்போலச் சிலவற்றைக் கூறப் புகுகிறான். "அண்ணா, இதுவரை நம் சரணங்களையன்றி வேறு புகல் காணாதிருந்த அமரர்கள். இப்பொழுது மாறிவிட்டார்கள். சானகியாகிய நஞ்சைத் தின்றவர்கள் உய்வதரிது என நன்குணர்ந்த அவர்கள், நம்பாலுள்ள அச்சம் நீங்கினார்கள். இதனை நன்குணர்ந்த நம் அரக்கர்களும் அதனை உன்பால் கூறின், நீ கோபிப்பாய் என்ற காரணத்தால், உன்பால் கூறாது இருந்துவிட்டார்கள். தேவர் முதலியோர் அச்சந் தீர்ந்ததோடு மட்டும் நிற்கவில்லை; அடிக்கடி இலங்கையை வந்து கண்டுவிட்டுச் செல்கின்றனர். இவர்கள் செயல்மட்டோடும் இது நின்றுவிடவில்லை. நமது உணவை உண்டு வளர்ந்த நன்றியறிவுடைய குதிரைகளும் யானைகளும், கோட்டையினுள் புகும் பொழுது தம் இடக்கால்ை முன் வைத்துப் புகுகின்றன. இவையனைத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறேன். அதனையும் கூறிவிடுகிறேன்" என்று கூறத் தொடங்கினான்: இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது அசைவில் கற்பின் அவ் வணங்கைவிட்டு அருளுதி; - - இதன்மேல் விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான். - (கம்பன் - 6.169)