உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் நினைவே தோன்றுகிறது. அவனது வன்மையின் முன்னர் இராவணன் வலியற்றுப் போவதை நன்கு அறிபவளாகலின், அதனை எடுத்துக் கூறுகிறாள். வெள்ளியங்கிரியனை எடுக்கவும் விடையின் பாகன் தன் கால்விரலால் அழுத்த, அதனால் பெருந்துன்பம் அடைந்தவன் இராவணன். அதனை எடுத்துக் கூறி, அத்தகையவனது வில்லை முரித்தவன் இராமன் என்றும் கூறுகிறாள்; இராவணனை வென்றவனாகிய கார்த்த வீரியனை வென்றவன் இராகவன் என்று இவ்வாறு வரிசையாக அவன் தோல்விகளையும் இராகவன் வெற்றிகளையும் அடுக்கிக்கொண்டே செல்கிறாள். இவை அனைத்தும் இராவணனுக்குத் தெரியாதவை அல்ல. எனினும், சீதை இவற்றை எடுத்துக் காட்டுவதில் உள்ள நியாயம் என்ன என்பதைக் காண வேண்டும். பெரும்பாலும் ஆத்திர முடையவர்கள் பேசுவது போலவே அமைந்துள்ளன அவளுடைய சொற்கள். தன் மனத்திற்குத் தைரியம் கூறும் முறையிலேயே அவள் பேசுகிறாள். இங்ங்னம் பேசிக்கொண்டே சீதை, இறுதியில் அரியதொரு கருத்தையும் கூறுகிறாள். ஒரு பெரிய மன்னன் வீட்டில் பிறந்து மற்றொரு மன்னனை மணந்து வாழ்ந்த அவளுக்கு அரசனைப்பற்றிய பல இன்றியமையாத குறிப்புகள் தெரிந்தேயிருக்கும். மன்னனுக்கு மதியமைச்சர்கள் கண் போன்றவர்கள். அமைச்சரை வைத்து நடாத்தாத அரசியல் அழிந்தே தீரும். அவ்வமைச்சரும் எத்தகையவராய் இருத்தல் வேண்டும்? பொதுமறை தந்த பெரியார். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் . கெடுப்பார் இலானுங் கெடும் (குறள், 448)