'இடிக்குநர் இல்லான் 125 பலபடியாகத் தன் கருத்தை எடுத்துக் கூறிய இலங்கை வேந்தனுக்குச் சீதை இறுக்கும் விடை ஆராயத் தக்கது. முதன் முதலாகத் தன் கணவனது வன்மையை விரிவாகக் கூறத் தொடங்குகிறாள் சீதை. இதுவும் அவளுடைய மனநிலையை அறிவிக்கும் பகுதியாகும். சாதாரணமாக உலகியலில் இத்தகைய தன்மையைக் காண்கிறோம். விவக்ாரத்தில் தளர்ச்சியுற்றவர்கள் தங்கட்குச் சாதகமான இரண்டொரு பகுதிகளை விடாமல் உரக்கக் கூறுந் தன்மை நாமறிந்த தொன்றே. சீதையின் தளர்ந்து வருந்திய மனத்திற்கு இராகவனைப்பற்றி நினைந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. அந் நினைவும் உரக்கப் பேசி மனத்தைச் சமாதானப் படுத்திக்கொள்ள வேண்டியதாகிறது. தனக்குத் துணை யாரும் இல்லாது அஞ்சி நிற்கும் அவளுக்குத் தானே உரக்கப் பேசும் இவ்வார்த்தைகளே ஆறுதல் தரக் கூடியனவாம். எனவே, அவர் கூறத்தொடங்குகிறாள். மேருவை உருவ வேண்டின் விண்பிளந்து ஏக வேண்டின் ஈரெழு புவனம் யாவும் முற்றுவித் திடுதல் வேண்டின் ஆரியன் பகழி வல்லது - அறிந்திருந்து. அறிவி லாதாய் சீரிய அல்ல சொல்லித் தலைப்பத்தும் சிந்து வாயோ? (கம்பன் - 5185) இங்ங்னம் கூறத் தொடங்குவதால் இராவணன் வன்மையைத் தான் சிறிதும் மதிக்கவில்லை என்பதைக் கூறுவாளாகிறாள். இராவணனுடைய தற்பெருமையை நன்கு அறிந்து கொள்ளப் பல சந்தர்ப்பங்கள் இருந்தமையின், அவற்றையெல்லாம் ஒவ்வொன்றாய்க் கூறி, அவன் அழிவது உறுதி என்பதை எடுத்துக்காட்டு கிறாள். கேட்கும் போதும், சீதைக்கு இராமன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/142
Appearance