பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் as gua o os தங்குலப் பகைஞர் தம்பால் போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் ஆவது கற்பி னாரை வஞ்சிக்கும் ஆற்ற லேயாம். (கம்பன் - 3402) இங்ங்னம் அவள் கூற இடந்தந்து விட்டானாகலின், இராவணன் மேல் சீதைக்குச் சிறிதும் மதிப்பு இல்லாமற் போயிற்று. கர துடணர் வதையால் ஒருவாறு அரக்கர் குலத்தைப்பற்றியே தாழ்ந்த கருத்துக் கொண்டிருந்த சீதைக்கு, இராவணனும் இங்ங்ணம் கோழைச் செயல் செய்தது, மேலும் அவர்கள் மாட்டுத் தாழ்ந்த கருத்தையே உண்டாக்கிற்று. இறுதிவரையிற் சீதையின் மனநிலை இவ்வாறே இருக்கக் காண் கிறோம். இனி அடுத்துச் சீதையை அசோக வனத்தில் இராவணன் சந்திக்கிறான். பெண்கள் மனநிலையை முழுதும் அறியாதவனாக இராவணன் சீதையைக்காண வருகிறான்; ஊர்வசி உடைவாளைத் தாங்கி வரவும், மேனகை அடைப்பை தாங்கவும், செருப்பினைத் திலோத்தமை துரக்கி வரவும், அரம் பையர் குழாம் சூழ்ந்து வரவும் கங்குலும் பகல் படுமாறு தோன்றினான். இத்துணைப் பெண் மக்கள் உடன் வருதலைத் தனது பெருமையின் அறிகுறியாக இராவணன் நினைத்து அழைத்து வந்தான். சீதையைக் கண்டு நிற்கும் அவனையும், அவனைக் கண்டு நிற்கும் சீதையையும், ஆசிரியன் படம் பிடிக்கிறான்; "கூசியாவி குலைவுறுவாள்' என்றும், ஆசையால் உயிர் ஆசழிவான் என்றுங் கூறுகிறான். நின்ற இராவணன் கூசிக் கூசிப் பேசத் தொடங்கினான். அதனை ஆசிரியன், வெவ்விடத்தை அமிழ்தென வேண்டுவான் என்று கூறுகிறான்.