128 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் போற்றி வணங்கப்படும் தேவர்கள் இங்கு இராவணனுக்கு அடிமை பூண்டு ஏவல் செய்கின் றார்கள். எத்துணைத் தவம் புரிந்து இத்துணைச் சிறப்புக்களை அவன் பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் சீதை. இவையனைத்தும் வீணா கின்றனவே!' என்று நினைந்தவுடன் இரக்கமே தோன்றுகிறது. அவ்விரக்கத்தாலேயே அவள் பலவாறு அவனை இடித்துக்கூறி அறிவுரை பகர்கின்றாள். இனி அவள் காட்டும் இரக்கத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. இராவணன் தனது பெருமையைக் காட்டும் அளவில் நின்றிருப்பானேயாகில் சீதைக்கு அவன்மாட்டு அச்சமே நிகழ்ந்திருக்கும். அவன் அவ்வாறு செய்யாமல் தன்நிலையின் இழிந்த சொற் களை ஓயாது அவள் எதிரே சொல்கிறான். அவன் கூறுகிற சொற்களைக் கேட்டால் யாருக்குமே இரக்கம் தோன்றாமல் இராது. என்றுதான் அடிய னேனுக்கு இரங்குவது இந்து என்பான் என்றுதான் இரவியோடு - வேற்றுமை தெரிவது என்பால் ? (கம்பன் - 7640) இங்ங்னம் தன் பெருமையையும் ஆண்மையையும் காற்றில் விட்டுவிட்டுப் பேசத் தொடங்கிய அவன் மிகத் தாழ்ந்த நிலையை அடைந்துவிடுகிறான். 'இராவணனா பேசுகிறான்! என்று நாம் வியக்கிறோம். யார்க்கும் வணங்காத மணிமுடி தாழ்த்தி அவன் சீதை பால் அழுவது வெறுப்பையும், நகைப்பையும், சீற்றத்தையும் ஒருங்கே உண்டு பண்ணுகின்றது. வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட நஞ்சுதோய் அமுத முண்பான் நச்சினேன் நாளுந் தேய்ந்த நெஞ்சுநே ரானது உம்மை நினைப்புவிட்டு ஆவி நீக்க அஞ்சினேன் அடியனேன் உம் அடைக்கலம் அமுதின் வந்தீர்!
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/145
Appearance