'இடிக்குநர் இல்லான்' 129 தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல்துாற்ற வேர்ப்பித்தீர், வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில் வேளை ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்! அமரர் அச்சம் தீர்ப்பித்தீர்; இன்னம் என்னென் செய்வித்துத் தீர்திர் அம்மா ! (கம்பன் - 7641, 7642) மனித இயல்பில் காமமும் காதலும் ஒரு பெரிய இடம் பெறுதல் உண்டு. ஆனால் அவை அவனிடம் உள்ள ஏனைய பண்புகள் அனைத்தையும் அமிழ்த்தி மேலெழுந்து ஆட்சி செய்ய விரும்பினால், அச்செயல் வெறுத்தற்குரியதே. தனது பெருமையனைத்தையும் தவறான காமத்தின் முன்னிலையில் பலி இடும் இராவணனை நாம் இப்பொழுது போற்ற இயல வில்லை. தலையின் இழித்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை - - (குறள், 964) என்பது பொய்யா மொழியன்றோ? இங்ங்னம் பேசும் ஒருவனை எந்தப் பெண்தான் பொறுக்க இயலும்? சீதை அதனைப் பொறாது அவனைப் பழித்தது இயல்பே அன்றோ? மேலும், பெண் தன்மையும் தாய்மையும் மிக்குடைமையின், அவளுக்குக் கோபத்தைக் காட்டிலும் இரக்கமே மிகுதியாகத் தோன்றிற்று. இராவணனை முதலிற் கண்டபொழுது சீதை கொண்டிருந்த அச்சம் சிறிது சிறிதாக நீங்கிவிட்டது. அவன் தன்னைத் தொட்டுப் பலாத்காரமாக ஒன்றுஞ் செய்யான் என்பதை அறிந்த சீதை, அவன்பாற் கொண்ட அச்சம் நீங்கினாள். இறுதிவரை அவன் மாட்டு இரக்கமும், அவன் கூறும் தவறான மொழி
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/146
Appearance