பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 161 நிலையில் இல்லை என்று உண்மையை உணர்த்தி யிருக்க வேண்டும். வேறொரு பெண்ணை மணந் தவனை விரும்புவது பேதைமை எனச் சூர்ப்பணகை அறிந்திருக்கமாட்டாள், என இராகவன் எண்ணினால் என்றால், அஃது அவன் குறைவைக் காட்டுமே யொழிய, அவன் நடத்தைக்கு விளக்கமாகாது. 'அரக்கரை மானுடர் மனப்பது பொருத்தமுடைய தன்று எனப் பெரியோர் கூறுவர் என்று இராமன் வாதம், அவனுக்கு அவளிடத்தில் விருப்பம் உண்டு என்றும், ஆனால் பிறருக்கஞ்சி, அவன் அவளை மணக்க இசையக்கூடாத மன நிலையை உடைய வனாய் இருக்கிறான் என்றும் அறிவிக்கின்றதன்றோ? இராகவனுடைய இப் பொருத்தமின்மையாகிய வாதத்திற்குச் சூர்ப்பனகை தகுந்த பதிலளிக்கிறாள்; நான் முன்னரே இராக்கதர் பழக்க வழக்கங்களைக் கைவிட்டுவிட்டு தபோதனரைச் சார்ந்து, அவர் களுடைய மேலான ஒழுக்க முறைகளை மேற் கொண்டேன் என்று கூறினேனே! என்றாள். இன்னும் இராமன் தன் விளையாட்டை விடவில்லை. உனக்குக் குபேரனும் இராவணனுமாகிய அண்ணன்மார் இருக்கையில், அவர்கள் கொடுக்கக் கொள்ளலாமே யொழிய நீயே என்னைத் தேர்ந்தெடுப்பதை நான் விரும்பமாட்டேன்' என்றான். கந்தர்ப்ப முறையில் நடக்கும் மணத்தை வேதங்களும் ஒப்புகின்றன’ என்றாள் சூர்ப்பனகை மேலும், அவளை மணம் புரிவதால், இராமன் உலகில் ஒப்புயர்வற்ற வல்லமை யுடையவனாகவும், தேவர்களை ஏவல் கொள்ளத்தக்க வனாகவும் ஆதல் கூடும் என்றும் சொன்னாள்.