160 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் இயற்கையின் பிடிப்பினின்றும் மீறி நடக்க முடிய வில்லை. சூர்ப்பணகையின் எழிலும் பேச்சும் அவனைக் கவர்ந்தன. அவளோடு அளவளாவும் அளவுக்கு அவன் தன்னிலையை மறந்து நடந்து கொண்டதைக் காமவிகாரத்தால் பீடிக்கப்பட்ட சூர்ப் பணகை, தான் வெற்றி பெறுவதாகக் கொண்டதில் இழுக்கென்னை? 'இவள் அரக்கி, நீதி நிலையிலாள்; வேறு நோக்கத்தோடு வந்தவள் என்று எண்ணிய இராகவன், நான் உன்னை மணக்க விரும்பவில்லை' என்று தீர்மானமான பதிலைத் தாராது, 'அந்தணர் பாவை நீ நான் அரசரில் வந்தேன்' என்று ஏன் கூற வேண்டும்? முள்ளை முள்ளால் எடுப்பது போலச் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் என்பது கருதியா? சூர்ப்பணகை தன்னைப் பற்றிக் கூறியவை அனைத்தும் பொய் என்பதை நாமறிவோம். ஆனால், அவள் இராமனிடத்துக்கொண்ட காதல் புனித மானது; இதை அவள் அடுத்துக் கூறும் விடையே உறுதிப்படுத்துகிறது. ‘என் தகப்பன் அந்தணனே யொழியத் தாய் அரச வமிசத்தைச் சேர்ந்தவளே. நீ என்னை மணந்து கொள்ள முடியாததற்கு இதுவே காரணமானால், நான் உயிர் துறக்காமல் வேறென்ன செய்யக் கூடும்?' என்றாள். இதுவரை இராமன் பேசி வந்த போக்கைப் பொருட்படுத்தாமல் விடினும் இப்பொழுது சூழ்ச்சிக் காரியாய் உள்ள சூர்ப்பணகை து.ாய உள்ளத்தோடு பேசியதை இராகவன் உணராமல் இருந்திருக்க முடியாது. இதுவும் ஒரு சூழ்ச்சி என்று கொண்டான் என்றாலும், அவன், நான் மணம் ஆனவன். எனவே, உன்னை ஏற்றுக்கொள்ளும்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/177
Appearance