தீமையின் முதற்படி 9 177 காண வந்தாள்; வந்ததும், அதைப் பற்றிப் பேசினால் அவன் எங்குத் தன் சூழ்ச்சியைத் தெரிந்து கொண்டு விடுவானோ என்றஞ்சி, அவன் கேட்கக் கேட்க ஒவ்வொன்றாக தான் பரிபவப்பட்ட வரலாற்றைப் பகுத்துக் கூறி, பின்னர் முடிவில் சீதையை வருணித்து, அவளிடத்தில் அவன் ஈடுபட்டதை உணர்ந்த பின்னரே, அவளை அவனிடம் சேர்க்கச் செய்த முயற்சியே தன்னை அவமானத்திற்காளாக்கியது எனக் கூறி முடித்தாள். சூர்ப்பனகை நினைத்தபடியே இராவணன், சீதையை அடையவேண்டும் என்ற எண் ணத்தை மிக்குடையவனாய், அவளே நினைவாக வருந்தியிருந்தான். அவள் உருவைக் கண்டதுபோன்ற உணர்ச்சி தோன்றியதும், சூர்ப்பனகையை வரவழைத்து 'நான் கண்ட இவ்வுருவம் சீதையினுடையதா? என்று கேட்டான் அவன். சீதையைக் குறித்து வருந்தியது போல அவளும் இராமனைக் குறித்து வருந்தியிருந்தாளாகையால், "இஃது இராமன் உரு என்று கூறினாள். இராவணன் திகைத்தான். அவள் ஏன் மாறாட்டமாகப் பேச வேண்டும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. நீ ஓயாது சீதையின் நினைவாய் உழல்வதால், நீ கண்டது உன் மனக் கற்பனையே’ என்று சூர்ப்பண்கை விளக்கினாள். ஆயின், நீ எப்படி இராமன் என்று சொன்னாய்? என அவன் கேட்டான். என்று என்னை அவமானப்படுத்தினானோ, அன்றுதொட்டு என்னாலும் அவனை மறக்க முடியவில்லை என்று கூறினாள் வஞ்சி, அவள் சமாதானத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டான்: 'என்னை வருத்தும் சீதையின்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/194
Appearance