தீமையின் வளர்ச்சி 4 191 அவ்வாறு செய்யாததற்குக் காரணம், வீடணன் தன்னைக்காட்டிலும் இராமனிடத்து மிக்க அன்பு கொண்டவனாகவும், அவன் உதவியால் இலங்கையின் அரசை அடைய ஆசைப்படுபவனாகவும் அவனுக்குத் தோன்றினமையே! பாழிசால் இரணியன் புதல்வன் பண்பு எனச் சூழ்வினை முற்றியான் அவர்க்குத் தோற்றபின் ஏழைநீ என்பெருஞ் செல்வம் எய்தியின் வாழவோ கருத்து ? அது வரவற் றாகுமோ? - (கம்பன் - 6368) வீடணன் தன் இச்சைக்கேற்றவைகளைக் கூறாதலால் இராவணன் இவ்வாறு கூறினானா, அல்லது உண்மையிலேயே தன்னெஞ்சறிந்ததை உள்ளவாறு கூறினானா என்பதை ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை. ஏனெனில், அடுத்த ஐந்து பாடல்களில் அவன் தன் கருத்தை வலியுறுத்தும் வீடணன் செயல்களை எல்லாம் விவரமாகக் கூறுகிறான். இவ்வளவு உணர்ந்து கூறுபவன், திண்ணிதுன் செயல்! பிறர் செறுநர் வேண்டுமோ? என்றும், நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்றரோ!' என்றுங் கூறுபவன், வீடணனை ஏன் பகைவரைப் போய்ச் சேர விட்டு விட்டான்? பழியினை உணர்ந்து அவனைக் கொல்ல விரும்பாதது இராவணன் பெருமைக்குச் சான்றே. ஆனால், உட்பகைவனாய் இருந்தவனைத் தன்னெஞ்சறிய உட்பகைவன் எனக் கண்டவனைச் - சிறையில்ாவது அடைத்து வைத்திருக்கலாமன்றோ? -இவ்வாறு செய்திருப்பின், இராமாயணத்தின் முடிவு முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். காம மயக்கம் காரணமாக இராவணன் குலம், மானம், வீரம், புகழ் முதலியவற்றை இழந்ததோடு, மா.வி.-14
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/208
Appearance