பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 193 கோவலன் கொலையை ஆய்ச்சியர் அறிந்து கொள்வதற்கு முன், இடைச்சேரியில் பல உற்பாதங்கள் தோன்றின என்றும், கண்ணகி வழக்காட வருவதற்கு முன்னரே கோப்பெருந்தேவி பல துன்னிமித் தங்களைக் கண்டாள் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இராவணன் அழிவை முன்னரே அறிவிப்பவை போல இலங்கையில் பல உற்பாதங்கள் தோன்றின. அவற்றை வீடணன் விளக்கமாக எடுத்துக் கூறி, இராவணனை எச்சரித்தான். வீடணன் மேலிருந்த வெறுப்பால், இலங்கையர்கோன் அவன் கூறிய உற்பாதங்களைப் பற்றிய பேச்சைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, இயற்கை மீண்டும் பல உற்பாதங்களைத் தோற்றுவித்து, இராவணனுக்கு வரவிருப்பனவற்றை ஒருவாறு உணர்த்துகின்றது. பெரியோரைக் காக்க இயற்கை மேற்கொள்ளும் முயற்சிதான் எத்தகையது ! இரண்டாவதாக இப்பொருளைப்பற்றி இராவணனிடம் பேசியவன் மாலியவான். ஆயிரம் உற்பா தங்கள் ஈங்குவந்து அடுத்த என்றார்; தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறியத் தக்கோன் ஏயின தூதன் எற்ற பற்றுவிட்டு இலங்கைத் தெய்வம் போயின. தென்றுஞ் சொன்னார்; புகுந்தது போரும் என்றார் - (கம்பன் - 6825) இலங்கையைக் காத்து நின்ற தெய்வமே, அவ்விடத்தை விட்டகன்று விட்டது. இதையும் பொருட்படுத்தாத அறிவுடையவன் இருப்பானோ! முன்னர் வீடணன் குதிரைகள் இடக்கால்களை எடுத்து வைத்துக் கூடத்திற் புகுந்ததைத் துன்னிமித்தமாகக் கூறினான்.