பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமை முற்றுகிறது . 203 வதேயானாலும், அவன் கொண்டுள்ள அன்பு ஊனைப்பற்றியதேயன்றி, கும்பகருணன் எனக்கு உறுதுணையாய் இருப்பவனன்றோ?' என்ற அறிவைப் பற்றியதன்று. ஆகவேதான், கண்ணிர் உகுத்தவன் கும்பகருணனை இறக்காமலிருக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துக்கு இடமளிக்கவில்லை, கும்ப கருணன் இறந்தான்; அதிகாயன் மாண்டான்; இந்திரசித்தன் பகைவரைப் பிணித்த நாகபாசம் கருடனால் பயனற்றதாக்கப்பட்டது. பின்னர், பிரமாத்திரத்தால் வருந்திய பகைவர், அனுமனால் காப்பாற்றப்பட்டனர், ஆகவே, இந்திர சித்தன் நிகும்பலையில் யாகஞ் செய்யப்.புறப்பட்டான். ஆனால், வீடணனால் அதை அறிந்துகொண்ட பகைவர், அவனை யாகம் செய்து முடிக்க வொட்டாமற் செய்துவிட்டனர். இத்தனை தடைகள் ஏற்பட்ட பின்னரே, இந்திரசித்தன் பகைவரை வெல்லுதல் எவர்க்கும் கூடாத காரியம் எனத் தகப்பனுக்குத் தெரிவித்தான். அப்பொழுதுகூட அச்சத் தால் அக்கருத்துக்கு அவன் இடமளிக்கவில்லை. உண்மையை ஒப்புக்கொள்வதில் பழியோ அவமானமோ இல்லையன்றோ? தன் தகப்பன் இறந்துபட வேண்டா என்ற ஆசை காரணமாகவே, பகைவரை வெல்ல முடியாது என்று எடுத்துக் காட்டி, சீதையை விட்டு விடுமாறு தகப்பனைக் கேட்டுக் கொண்டான். இதனை 'உன்மேல் காதலால் உரைத்தேன்' என்று அவன் வற்புறுத்திக் கூறியும், இராவணன் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறரை நம்பி இப் பகையைத் தேடிக் கொள்ளவில்லை. நீ சிரமம் நீங்கிச் சுகமேயிரு. நான் போருக்குச் செல்கிறேன் என்று கூறி எழுந்தான் இராவணன்.