பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கவிஞன் மனத்தில் தோன்றிய மதிப்புக்கு வேறு என்ன சான்று விதியினாலன்று என்றும், விதிக்கெல்லாந் தலைவனான வேதமுதற் காரணனாலென்றும் இராவணன் நினைத்தாக ஆசிரியன் கூறவிட்டான். அங்ங்ணம் அவன் கூறுகையிலேயே, நாமும், அம் முதற்காரணனோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளான் இராவணன் என்று நினைக்கிறோம். ஏனென்றால், ஏனையோர்போலச் சாதாரண முறையில் இராவணன் இறந்துபடவில்லை. அவ் வேத முதற்காரணன் மானுடவடிவம் தாங்கி, அரசைத் துறந்து, தம்பியொடும் கான்போந்தும், மனைவியைப் பிரிந்து, வருந்தி நின்று, நீண்டதொரு போரைச் செய்தே இராவணனுடைய உயிரை மாய்க்க வேண்டி இருந்ததென்றால் ஏனையோரினும் இராவணன் வேறுபட்டவன் என்பதும், அம் முதற்காரணன் இவ்வளவும் இராவணனுக்காகச் செய்தான் என்பதால் இருவரும் மிகவும் தொடர்புடையவர்கள் என்பதும் நாம் அறிகிறோம். அம்முதற்காரணனாலே கொல்லப்படும் தறுவாயில் தான் கொல்பவனும் கொல்லப்படுபவனும் ஒன்றாக ஆகிவிடுகிறார்கள். அதனாலேயே அவலத் தலைவன்மாட்டு நாம் கொண்டுள்ள மதிப்பு உயருகிறது. வேத முதற்காரணன் நேரே தோன்றி அழிக்கவேண்டிய சிறப்புகளை உடைமையால் தலைவன் சிறக்கிறான்; அம் முதற்காரணனது விருப்பத்திற்கிணங்கியே உயிரைத் தருகிறான். இனி, அவலத்தில் தீமையின் செயலையுங் காண வேண்டும். பெரும்பாலும் அவலத் தலைவன் வீழ்ச்சிக்குக் காரணமாயிருப்பது அவன்பாற் காணப்படும் ஓரிரு தீமைகளேயாகும். முழுதும்