அவலம் 31 பெற்ற பொருளால் அழிந்தான் என்று அறியினும், அவன்மாட்டுக் கொண்ட மதிப்பு நம் மனத்தினின்று நீங்குவதில்லை. இப்பகுதியில் ஐயப்பட்டு இதனை மறுக்கிறவர்களும் உண்டு. பேராசிரியர் ஹேகலே இதனை மறுக்கிறார். குற்றம் காரணமாக வீழ்ந்த அவலத் தலைவர்மாட்டு வியப்பும் மதிப்பும் நம் மனத்தில் தோன்றுதல் இயலாத காரியம் என்பதே அவருடைய எண்ணம்போலும். ஆனால், அவர் கருத்துப்படி நன்மையும் முரண்பட்டு ஏற்படுகிற அவலத்திலும் குற்றமில்லை என்று கூறுவதற்கில்லை. நற்பண்புகள் ஒன்றை ஒன்று விஞ்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பதால்தானே அங்கும் அவலம் பிறக்கிறது? அப்படி அவை நினைப்பதும் ஒரு தவறுதானே! எனவே, பொதுவாகக் குற்றம் காரணமாக வீழ்ச்சியடைந்தார்மாட்டு நாம் வியப்புக் கொள்வது தகாது என்று கூறிவிட்டால், 'ஹேகல்' கருத்துப்படி ஏற்படும் அவலத்திற்கும் நாம் வியப்படைதல் இயலாத காரியமாகும். எனவே, அவர் கருத்து ஒப்பக் கூடியதாயில்லை. மேலும், தற்காலத்தார் இதனை ஒப்புவதில்லை. 'ஹேகலின் அவலத் தத்துவத்தை ஆராய்ந்த பேராசிரியர் 'பிராட்லி என்பாரும் ஹேகலின் கொள்கையை மறுக்கிறார். மேலும், இவ் அவல வீரர்களின் வாழ்க்கையைக் காணும் நமது அனுபவமும் இக் கருத்திற்கு அரண் செய்கிறது. நிற்க, நமது தமிழ்க் காப்பியங்களிலும் இக் கருத்தே வலியுறுத்தப்படுதல் காணலாம். இராவணன் மாய்ந்தான் என்று கூற வரும் பொழுது, அவன் பெருமைகளை எல்லாம் ஒன்றொன்றாக எண்ணிப் பார்க்கிறான் கவிஞன். மும்மடங்கு பொலிந்தன. என்று இறந்தவன் முகங்களைக் கூறுகிறான் என்றால், இ.மா.வி.-4
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/50
Appearance