உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கையின் மாட்சி ! 49 அவை வீசும் ஒளி மின்னலையும், கதிரவனையும் தோற்கச் செய்கின்றது. இவை உயர்வு நவிற்சியணியின் பாற்படினும், இவற்றுள் உண்மையில்லாமற் போக வில்லை. இத்தகைய அருநகரைச் சமைத்த தேவதச்சனைப் புகழுதல் ஒல்லுமோ!' என்று கூறு முகத்தான், ஆசிரியன், கலைஞனது படைப்பினை யாவரே முடியக் காண்பார்!’ என்ற உயர்ந்த தத்து வத்தை விளக்குகிறான். இத்தருணத்தில் இராவணனே ஒரு கலைஞன் என்பதை அறிய வேண்டும். ஒரு நகரின் பெருமையைப் பொருட் செல்வர் வாழும் இடத்தை மட்டும் கண்டுவிட்டுப் புகழுதல் சிறப்புடைமை யாகாது. இலண்டன் மாநகரப் பெருமையைக் கிழக்கு இலண்டனைப் பார்த்த பிறகு, யாரும் விவரிக்க முன் வாரார். உலகத்தில் பல்லிடங்களிலும் உள்ள வறுமைக் குச் சிறிதும் இளைக்காத வறுமை தாண்டவமாடும் இடம், கிழக்கு இலண்டனாகும். ஆகவே, உண்மையை உணரவேண்டுமாயின், இத்தகைய பகுதிகளையே காணல் வேண்டும். இதேபோலக் கம்பநாடன் இலங்கையில் மக்கள் வாழும் பகுதிகளை வருணித்து விட்டுக் குதிரைகளும் யானைகளும் கட்டப்படும் கொட்டிலைக் கூறுகிறான். மிருகங்கள் கட்டப்படும் இடங்கள் மிகச் சிறப்புடையனவாய் இருப்பதற் கில்லை. ஆகவே, அவற்றின் சிறப்பைக் கூறின் - மற்றவற்றைப்பற்றிக் கூறவேண்டா என்று நினைத்துப் போலும் அதனைக் கூறுகிறான்! மரகதம் முதலியன வற்றால் செய்யப்பெற்ற தேர்கள் நிறுத்தப்படும் கொட்டிற்சாலைகள் சூரியனும் வெள்கும்படி ஒளிவிடு கின்றனவாதலால், இவற்றையுடைய இலங்கையோடு ஒப்பு நோக்கினால், சொர்க்க உலகமும் நரகமென்றே மதிக்கப்படும், என்கிறான்.