56 ல் இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் களைப் பார்ப்போம்; இவற்றிலிருந்து இராவணனது இலங்கையைப் பற்றிய ஒரு முழுக் காட்சியை நாம் பெறமுடியும்; பளிக்கு மாளிகைத் தலந்தொறும் இடந்தொறும் பசுந்தேன் துளிக்குங் கற்பகத் தண்நறுஞ் சோலைகள் தோறும் அளிக்கும் தேறலுண்டு ஆடுநர் பாடுநர் ஆகிக் களிக்கின் றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன். நித்தநிய மத்தொழில ராய்நிறையும் ஞானத்து உத்தமர் உறங்கினர்கள்; யோகியர்து யின்றார்; மத்தமத வெங்களிறு உறங்கின; மயங்கும் பித்தரும்உ றங்கினர்; இனிப்பிறரிது என்ஆம் ?" (கம்பன் - 4864, 4999) இத்தகைய நிலையில் சாதாரண மக்களும் உத்தமர்களும் வாழ வேண்டுமாயின், அது கொடுங் கோல் மன்னன் நாட்டில் இயலுமோ? 'ஆடுநர் பாடுந ராகி வாழ்கின்றார் களிக்கின்றாரலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன், என்ற வாக்கால், அம்மக்கள் வாழ்வு படம் பிடித்துக் காட்டப்படுகிறது. மக்கள் மனத்தில் மகிழ்ச்சி பொங்கித் ததும்பிய பொழு தல்லவா இசை பிறக்கும்? வயிற்றில் வறுமை யில்லாத பொழுதல்லவா இசை பிறக்கும்? சீதையைக் கவர்வதன் முன்னர் இராவணன் செங்கோலனாகவே திகழ்ந்தான் என்று எண்ண வேண்டியுளது. அவன் வாழ்க்கை முறையைப் பின்னர்க் காண்போம். கவலையில்லாமல் தன் மக்களை வாழ வைத்தவன் இராவணன் என்பதை அறிகிறோம். இம்மட்டோ? கேவலம் பொருட் செல்வம் ஒன்றினாலேயே மகிழ்வடையும் பான்மையுடையார் மட்டுமே ஈண்டுக்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/75
Appearance