62 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கும்பகருணன் கொண்டுள்ள மதிப்பும் அன்பும் வெளிப்படுகின்றன. அவன் கூறும் முதற்கருத்தைக் காண்க: நீ ஆயன் முதற்குலம் இதற்கு ஒருவன் நின்றாய் ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் ஏயின உறத்தகைய இத்துணைய வேயோ ? (கம்பன் - 6118) இவ்வொரு பாடலிலேயே கும்ப கருணனையும் இராவணனையும் முழு வடிவத்தோடு காணமுடிகிறது. இராவணனை எத்தகையவன் என்று கும்பகருணன் கருதுகிறான்? அறிவுடை ஒருவன் பழிச்செயல் செய்ய முற்படுகையில் அதனால் விளையும் பயனையன்றோ முன்னர்க் கருதுவான்? பெரியோர் பற்றிச் சொல்லும் போது பழியெனில் உலகுடன் பெறினும் கொள்ளலர்; என்றன்றோ புறநானூறு கூறுகிறது? மேலும், தம்மால் விரும்பப்படுகிற பொருளிடத்து உயிரனைய காதல் உடையவராயினும், அப்பொருளைப் பெறுவதால் பழியேற்படுமெனில், சான்றோர் அப்பழிக் கஞ்சிப் பொருளை விடுவரே தவிரப் பழியோடு வரும் அப்பொருளை விரும்பமாட்டார். இக்கருத்தையே அகநானூற்றில் ஒரு பாடலில் காண்கிறோம். கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகம்) எனவே, கும்பகருணன் தன் அண்ணன் பெற்ற பழியை நினைத்தே வருந்துகிறான். அப்பழியும் அவனளவில் நிற்பதல்லவே! புலத்தியன் மரபிற்றோன்றி யமையின் அக்குடி முழுதிற்குமன்றோ பெரும்பழி
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/81
Appearance