'தீயினை நயந்தான் 67 பெறப்படுகிறதன்றோ! "பாவியர் உறும்பழி இதிற் பிறிதும் உண்டோ? பொன்னடி தொழத் தொழ மறுத்தல் புகழ்போலாம்!" என இங்ங்ணம் கூறுவதோடு அமையாமல், "என்று பிறன் மனைவியை விரும்பிச் சிறை வைத்தாயோ, அன்றே அரக்கர் புகழும் மாய்ந்தது!" என்றும் கூறுகிறான். இது சற்று நின்று ஆராய வேண்டும் இடம்: - என்று ஒருவன் இல்லுறை தவத்தியை இரங்காய் வன்தொழிலி னாய்மறை துறந்துசிறை வைத்தாய் அன்றொழிவ தாயினது அரக்கர்புகழ் ஐய! புன்தொழிலி னார்.இசை பொறுத்தல்புல மைத்தோ ? (கம்பன் - 6.121) நேர் நின்று போர் செய்து பகைவனை வென்று அவன் மனைவி மக்களைச் சிறைப்படுத்தி வைத்தல் உண்டு. ஆனால், ஒருவன் மனைவியைத் தவறான எண்ணத் துடன் கொணர்ந்து சிறை வைத்தல் அறிவுடையவன் செய்கின்ற செயலன்று. எனவே, தவறு நடந்தவிடம் சிறை வைத்தலில்லை. சிறை வைக்கப்பட்ட பொருளிடத்துக் கொண்ட தவறான விருப்பமே என்பதை நன்கு அறிவுறுத்துவான் வேண்டி முதற்பாட்டில் "வேறொரு குலத்தோன் தேவியை நயந்து சிறை வைத்தாய்' என்று கூறுகிறான்; இந்நயப்பே அழிவுக்குக் காரணம் என்றும் கூறுகிறான்; விருப்பம் ஏற்பட்ட அப்பொழுதே அரக்கர் புகழ் அழிவதாயிற்று என்றும் கூறுகிறான். ஏன் எனில், எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி (குறள், 145) என்று ஆசிரியர் கூறிப் போந்தாரல்லரோ! -
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/86
Appearance