'தீயினை நயந்தான் 75 ஊனுடை உம்பிக்கும் உனக்கு மேகடன்; யானது முடிக்கிலென்; எழுக, போக. (கம்பன் - 7363) என்ன கொடுமை! இராவணனா பேசுகிறான்! வீடணனையும் கும்பகருணனையும் ஒன்றாக்கி விட்டானே! துரோகம் என்பதைக் கனவிலும் கருதாத கும்பகருணனுக்கு இதுவா வெகுமதி! நன்று நன்று! மதியிழந்தான் இலங்கை மன்னன்; இதுவரை நடந்த போரில் நேரிட்ட அழிவு காரணமாக அறிவு மாழ்கி விட்டான். தன்னைத்தான் காத்து அறிவை ஒரு வழிப்படுத்தும் தன்மையை இழந்து விட்டுத்தான் பேசியிருக்க வேண்டும். இன்றேல், "இறங்கிய கண் முகிழ்ந்து இரவும் எல்லியும் உறங்குதி போய்!” என்று மனம் உளையுமாறு கூறுவானா? இலங்கை வேந்தன் அவசரத்தில் அமைதியை இழக்கும் பண்புடையன் என்று நினைக்கவேண்டியிருக்கிறது. இதன் பிறகு தன் பிழைக்குத் தானே வருந்துகிறான். அல்லாவிடில், கும்பகருணன் 'பிழை பொறுக்க! சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றவுடன் ஏன் கண்ணிர் பெருக்க வேண்டும்? அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும் செவ்வழிநீ ரோடும் குருதி தேக்கினான் (கம்பன் - 7370) இன்னும் முற்றிலும் மனத்தைக் கல்லாக்கிக் கொள்ள வில்லை. காரியம் சாதிக்க வேண்டும் என்ற ஒரே முடிபால் சிறிது அவசரப்பட்டுச் சில சொற்கள் கூறிவிட்டானே தவிரத் தம்பி என்ற அன்பு அவனை விட்டு இன்னும் நீங்கவில்லை.
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/94
Appearance