பக்கம்:இராவண காவியம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாப் படம் 29. உடனுறு துணைபகை யோடு சேறினும் கடலெனப் பகைமதில் கவிந்து கொள்ளினும் படையிழந் துடலுநர் பாடி தங்கினும் அடல்குறிக் கினுங்கலங் காத நெஞ்சினன். 30. குடிபழி யஞ்சுசெங் கோலன் மெய்ந்நெறி தொடுதுலை நாவெனச் சூழுஞ் செம்மையன் படுபயன் வேட்டிடாப் பகலின் பண்பினன் நெடுநிலப் பொறையினன் நிறையின் காவலன். 31. அன்னை போல் மன்னுயிர்க் கருளு மன் பினன் தன் னை யே தான் பொருந் தனியொ ழுக்கினன் முன் னை யோர் போற்றிய முறை பு ரப்பவன் பின் னை யோர் கடைப்பிடி பிறங்குஞ் சீர்மையான். 32. அன்புட னுலகின ரரசன் காப்பினாற் முன் பிலா தின்னலந் துய்ப்ப ராதலான் மன்பதை களுக்குடல் வாட்கை மன்னனே என்பதை யுணர்ந்ததற் கேற்பக் காப்பவன் 33. சான்றவ ராக்கிய தமிழின் பா வலன் ஆன் றவ ராக்கிய வறத்தின் காவலன் ஈன் றவ ராக்கிய வியல்பின் மேவலன் போன்றவ ராக்கிய புரப்பின் மாவலன் . 34. தாய்மொழி தாயினுந் தகவிற் போற்றுவன் ஆய்மொழி யாளர்த மன் புக் (கேற்றவன் காய்மொழி யாவதுங் கடிந்து மாற்றுவன் வாய்மொழி தப்பிடா வகையி லாற்றுவன்'. அருளுடை யந்தண ராக்கு 15ல்லவை பருகிசை மேவியாழ்ப் பாணர் நாவ வை மருவிய முத்தமிழ் வாயின் தீஞ்சுவை பெருகிய பயன்படு பெரிய பொற்குவை. 28. உடலுநர்-பகைவர். 30, துலை- தராசு. நிறை- அடக்கம், 32. மன்பதை-மக்கள். 83. போன்றவர் - தன்போன்ற முன்னோர்.