பக்கம்:இராவண காவியம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலகியற் படலம் 2. மைபட நீர்மலி வானின் மீவளச் செய்பட வாக்கிய செந்நெற் செம்பயன் தைபட வுழைப்பினைத் தகைய தாக்கியே கைபட வுழவர்கள் களிப்பின் மிக்கனர். 3. நிலவள மாயசெந் நெல்லொ டேனைய பலவகைக் கூலமாம் பயன் கைக் கொண்டவர் பொலிவுற வேபுதுப் பொங்கல் வைத்துமே ஒலிமிக விழவயர்ந் துவப்பின் மிக்கவர். 4, காதலிற் கலந்துளங் களித்த காதலர் போதுறு குழவிகண் டுவத்தல் போல்வயல் மீதுறு விளைவுகொள் மேழிச் செல்வர்கள் பேதுறு களிப்பினைப் பேச வேண்டுமோ ? 5. உழைப்பவர் தங்களுக் கோய்வு வேண்டலான் மழைப்பய னுதவிய மலையைக் கண்ணுறத் தழைப்பவ ருளத்தொடு தானுந் தூதனாய் விழைப்போடு நடந்திள வேனில் வந்ததே. 6. இலைவளம் வாய்ந்துகூர்ந் திலகும் வேல்வளம் சிலைவளம் வாள்வளஞ் செறிந்து செந்தமிழ்க் கலைவளங் கண்டுளங் களிக்குஞ் சிந்தையான் மலைவளங் கண்டிட மனத்தி லெண்ணினான். 7. தானினை கருத்தினைத் தமிழர் காணும் வானினம் வெருவீட வண்ட. ரோடுமொய் தேனின மருவிடச் செறியு மூவெறி யானையின் மிசைமுரசறைவித் தானாரோ. 3. தைமாதத்தில் உ 63) முபபின் பயண கைபடக் களித் தனர், செய்-வயல். 4, பே து து தல்-மய்ங்குதல்; தெளிவற்றகளிப்பு. 6. விழைப்பு-விருப்பம். இளவேனில் சித்திரையில் தொடங்கும். மாசிபங்கு னி யாகிய பின் பனிக் கால மும் மலைச்செலவுக் குரிய தாம், 6. இலை-வேலின் இலவடிவான தலை , சிலை-வில். 7. வண்டு. ஆண்வண்டு, தேன் -பெண்வண் டு. மூவெறி. வாய்மூக்கு குறிவழியொழுகும் வெறிர்ே.