பக்கம்:இராவண காவியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலாவியற் படலம் 37. ஐயணி கனியைக் கொம்பர் அமிழ்துறழ் பவளச் ' செவ்வாய் மையணி கண்ணார் கொள்ள வளைந்துமே கொடுக்குங் காட்சி நெய்யணி காணப் போந்த நேரிழை நல்லார் கையில் கையணி சேயைத் தாங் களிப்பொடு கொடுத்தல் போலும். வேறு 38. ஆயும்பொருள் பலவுந்தக வாய்ந்த மகிழ்ந் தினிய காயும்பொதிர் கதிரும்முதிர் கனியுந்நறுங் கிழங்கும் தோயுந்தயிர் பாலுந்தகு சுவைகண்டு.) நாவும் ஓயும்படி யிறையோ னுட. னுண்டேவழிக் கொண்டார். 39. சோலைப்பாடு மருவிக்கொடி தூ தாகவே தென்றற் காலைத்துணை யாகக்கொடு கண்சிமாமலர் தாவ மாலைப்படு குறிஞ்சித்தலை வருவீரென வேபைங் கோலக்கிளி வரவேற்கவே குறிஞ்சித்திணை பற்றார். 41). கலையுற்றொரு பாலவின் சுளைக் கனியைக்கொடு மந்திக் கிலையிட்டுமே யுணவேண்டிட விகல்விட்டது நின்ற நிலைவிட்டுமே வந்துண்டிட நீள்வால்மகிழ் மேற்கு மலையுற்றனர் தமிழுக்குயிர் வழங்குந்தமிழ் மக்கள். வேறு 41. அறையிடை வீழ்தரு மருவி நீர்த்தொடர் இறைமக னெழினலத் தீடு பட்டுமே நிறைமலர்த் தொடையலை நயந்து நீள்மலைக் குறமகள் சூட்டிடுங் குறிப்பிற் றோன்றுமே. . 37. ஐ-மென் மை, நெய்யணி-ஈன்றவள் நெய் ேதய்த்து நீராடு தல். பொ திர்தல்-நிறைதல். கொடி - தொடர். கணி-வேங்கைமரம். மாலைப்படு. மாலைபோல் மலர்ந்து. அல்லது, மால் ஐபடு-முகில் மிகப்படிந்துள்ள. 40, கலை- ஆண் கருங்குரங்கு. இகல்-ஊடல், நீள்வால். குரங்கு , 41. அறை-பாறை. நறை-தேன், மணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/119&oldid=987634" இலிருந்து மீள்விக்கப்பட்டது