பக்கம்:இராவண காவியம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20. 17. அயலுக்கய லோடித்தன தன்னைக்கொரு முத்தம் இயலுற் றரு கோடித்தன தெந்தைக்கொரு முத்தம் செயலிப்படி யாகத்துணை திகழிற்படு பெண்மைப் பயனைப்பெறு மங்கைத்திரு பருவத்தினை யுற்றான். வேறு 18. பொன்னை வேங்கையின் பூவை யிளந்தளிர் தன்னை வானிற் றகதக வென்றொளிர் மின்னை யொத்தொளிர் மேனியைத் தாங்கியே தன்னை யொத்துத் தயங்கி யியங்கினாள். 19, விண்ணை யுண்டு விளங்கொளி மேவுண்டு தண்ணை யுண்டு தளிரொடு பூவுண்டு பண்ணை யுண்டுறை பாட்டளி காவுண்டு கண் ணை யுண்டு கமழ்திரு மேனியாள், நீரை வைத்து நிவந்து அவள் கருங் காரை வைத்துக் கருமணல் வைத்திருள் சேர வைத்திருஞ் சைவலஞ் சேர்த்தளி ஊர வைத்த வொளிர்கருங் கூந்தலாள். 21. மதியை வைத்து மதிகண்டு வாடிடாப் புதிய தாமரைப் பூவை யருகினிற் பதிய வைத்துப் பளிங்கி னொளியினைப் பொதிய வைத்துப் பொலியு முகத்தினாள். 22. பிறையை வைத்துப் பிறையிற் படிந்துள் கறையை நீத்துக் கருங்குழற் கற்றையை மறைய வைத்து மரையின் பொலிவினை நிறைய வைத்து நிலவுமிழ் நெற்றியாள். 28. சிலையை வைத்துச் சிலையி னடிப்புறம் கொலைய வாளயில் கொன் னஞ் சுமைகயல் கலையி னோடளி காவி யரிக்குலம் நிலைய வெள்ளெ ன நீள்கருங் கண்ணினாள். 18, தயங்கி-விளங்கி. 23, அயில்-வேல். கொல் நஞ்சு. கலை-மான், அரி-கோடு,