பக்கம்:இராவண காவியம்.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 இராவண காவியம் 22. துள்ளிக் குதித்துத் துவண்டு விளையாடி வெள்ளத் தடங்கண்ணார் விழிபோன் மருண்மானே! உள்ளத்தைக் கொண்டேயா னோவா திருந்தேங்கப் பொள்ளெனச் சென்றார்க்கென் புதுநிலையைக் கூறாயோ. 23. வகிர்ந்த பனங்கிழங்கின் வாயசெங் கா னாராய்! புகுந்தென் னலனுண்ட புனன்மருத வூரனுக்குத் தகுந்த திதுவேளை தான் வாரா தேயொழியின் மிகுந்த வளமுன்றில் மிதியாதீ ரென்றுரையாய். 24. வெண்டா மரைவாழும் வெள்ளைச் சிறையனமே! உண்டே யென துநல மொளித்தகடற் சேர்ப்பனுக்கு வண்டார் குழலொருத்தி மலர்க்கண்முத் தாடியதைக் கண்டே னெனவுள்ளங் கனியச் சொலுவாயே, 25. என் னைத் தனியேவிட் டென்னலமுண் டே சென்றான் தன்னைத் தொடர்ந்தகன்ற தாழா மடநெஞ்சே! உன்னை யவனுக் குறவாக்கி யேவைத்த என் னைப் பிரிந்தவுன திழிதகைமை யென் கொல்லோ! அன்னவனைக் காட்டென் றம்மா வெனைக்கொத்தித் தின்னு மடநெஞ்சே! செழுங்குன்ற வாணனிடம் என் னை விடுத்தே யெரீஇச்செல் குவையாயின் உன் னோ டிருகண்ணு முடன் கொண்டு சென்றீவாய், வேறு 27, பிரியே னென் றான் வாய்மொழி பொய்யிற் பிரியாதே, உரியா ரெல்லா மூரலர் தூற்றற் குரியாரே, பெரியா ரெல்லாங் காவல் படுப்பிற் பெரியாரே, தெரியா வந்தான் சொல்லிய தொன்றுந் தெரியேனே. 26. 28, இது, இருத்தற் குறிப்பு. 23, இது ஊடற் குறிப்பு. 24. இது, இரங்கற்குறிப்பு. 28, கண் காட்டென்று கொத்தித் தின்கிறது கொண்டு செல் என்பதாம்.