பக்கம்:இராவண காவியம்.pdf/197

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52. என்றுரைத்துத் தமிழ்க்கழகத் திசைவளர்க்கு ஃ மிசையானை யினிது நேர்க்கக் குன் றுரைத்த குவவுத்தோட் குலப்பாண்டி, நாடானுங் கோட்டி யார்ப்ப நின்றுரைப்பான், றிசையெல்லா மிசைவளர்க்கு நெடியோனே நிலவு போலச் சென்றுறைக்குத் தாய்மொழியை வளர்த்துவர் லேயென து செங்கோ லாகும். 53. தன்னேருந் தமிழ்வளர விலக்கியமும் மிலக்கணமுந் தகுதி யாக முன்னோர்கள் செய்துவைத்த முதற்சங்க விடைச்சங்க முதுநூ லெல்லாம் பொன்னேபோற் போற்றியிருந் தமிழரெலாங் கற்றுநலம் பொருந்தி வாழ என்னாலீங் கியன் றபடி செய்துவரு கின்றேன் ம னிணை த்தாய் போல. 54. எப்போது நடந்துவரு வதுபோன்றே தமிழகத்தி னெல்லாப் பாலும் தப்பேது மில்லாத புலவர்கள்செய் தேகொணருந் தமிழ் நூல் தம்மை ஒப்பாரு மில்லாத முத்தமிழி னறிஞர்பல ரொருங்கு சூழ இப்போது மரங்கேற்றி வருகின்றேன் சிறப்புடனே யிதுவு மன்றி. 55. ஓங்குதமிழ்ச் சங்கத்தை முத்தமிழின் கரைகண்டே யுயர்வு பெற்ற பாங்குடையார் தமைக்கொண்டு முத்தமிழு முறையாகப் பயிற்று வித்தே ஆங்குபயின் றர்தம்மைத் தமிழகமெல் லாமனுப்பி யன் னார் தம்மால் தேங்குபுகழ் முத்தமிழும் பயிற்றுவிக்க வேற்பாடு செய்துள் ளேனால். 82, கோட்டி-அவை. உறைத்தல்-மிகுதல், 88. இணைத்தால்-செவிலி,