பக்கம்:இராவண காவியம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48. ஏவறிய வியலாப்பச் சிளங்குழவி புங்குழைந்துள் ளெழுச்சி பொங்க நாவடக்கிக் கேட்டின்புத் துறங்கும், விலங் இனம்புள்ளு நயந்து கேட்கும், மேவியபன் மனக்கவலை பறந்தோடும், மேவாரும் விழைவா ரென்றால் பாவிசையின் சிறப்பறிந்து பயிலாதா ரின்பொன்றும் பயிலா தாரே. 9. பாட்டறியா ரப்பாட்டைப் பண்ணோடு பாடலொடு, பாடி யாடும் ஆட்டறியா ரவ்வாட்டைப் பாவிசையைப் பாடலுட னாடக் கண்டு கேட்டறியார், பாட்டாட்டுக் குரித்தான முக்கருவி கிழமை யோடு கூட்டறியார் வாழ்வினிடை யின்பமெனுஞ் செம்பொருளைக் கூடா தாரே. 50. பண்ணமைய முவகைய கருவியொடு தொகப்பாடிப் பழக வேண்டும், கண்ணமைய வகத்துளெழு மெண்சுவையுங் காண்போர்க்குக் கருத்து ளாக எண்ணமைய! பலகூத்து மினிதாடிப் பழகியவை யிணையி லாது . மண்ணமைய வளர்ந்தோங்கச் செயல் தமிழர்க் கெலாமொருவா மரபே யாகும். 51. கைத்திறத்த வாய்த்திருத்த கருத்தொருமித் தியக்குபல கருவி யோடு மெய்த்திறத்த விறற் றிறத்த வாடலொடு பண்ணமைய விரும்பிப் பாடும் உய்த்திறத்த விசையோடு பாத்திரத்த "வியலோடுள் ளுருகக் கற்றே முத்திறத்த தமிழ் வளர்த்து முன்னோரின் " வழிகாத்தல் முறைமை யாகும். 48. ஏவு-கட்டளை. பா-பாத்தல. 9. முக்கருவி- ேதால், துளை, நரம்புக் கருவி. 80. தொக் - பொருந்த. எண் சுவை - வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், பெருமிதம், நகை. ஒருவர். சிங்கா. மாபு-முறைமை. 51, கைத்திறத்த - தேரில், துணை, நரம்புக் கருவிகள், விறல் மெய்ப்பாடு, உய்த்தல்-செலுத்துதல்,