பக்கம்:இராவண காவியம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36 72. எனவணிகன் மொழியவிறை யியல்வணிக ரேறேபொன் னில்லா தெந்த வினைபுரிய வியலும்தால் வாணிகம் முழவினொரு வினையே யாகும்; புனல்வளமு நில வளமும் பொருள்வளமுங் கடல்வளமும், பொருந்தி மேலும் மனவளமு (சிறையவுள தமிழருக்கீங்க கொருகுறையும் வருவ துணடோ? 73. கல்வியொடு நிலவளமுங் கைத்தொழிலும் வாணிகமுங் கலந்தா ரரய்ந்தே நல்வகையி லவையினிது நடக்கும்வகை தமைத்தேர்ந்து நாடாள் வேரருக் கொல்வனவெல் லாங்குழுமி யொருங்காய்ந்து மனங்களிகூர்ந் துலகாள் மன்னன் சொல்வளஞ்சே ரிசையரங்கு மாடரங்குக் தனித்தனியே சுவைத்தான் மன்னோ. 74. புலவருக்கும் பாணருக்கும் விறலியர்க்கும் கூ, த்தருக்கும் பொருந ரோடே இலகுமிசைக் கருவியர்க்குத் தகுதியுறப் பரிசில்பல வியல்பி னீந்து நிலவுமொளி யோன்பிரியா விடையோடு பல சிறப்பும் நேர்ந்தெல் லோரும் செல, வினிது தமிழகத்தைத் தேவியொடுங் காத்துவந்தான் சிறப்பின் மன்னோ. இரண்டாவது இலங்கைக் காண்டம் முற்றிற்று. 72, உழவின் ஒருவினை-உழவுபோலச் சிவந்த தொழில்,