பக்கம்:இராவண காவியம்.pdf/274

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 88. வஞ்சகி யாரால் கெட்டாய்? மாகுடி கேடி யென்ன; வஞ்சகி நானோ பொல்லா வஞ்சகா வஞ்சித் தாயே நஞ்சினுங் கொடியோ யுன் னை நம்பி நான் கெட்டே னந்த வஞ்சகி மகனோ வென்றன் மகனர சதைக்கைக் கொள்வான். 88. நங்கையென் பரிச மாயுன் நாட்டினை யெனக்குத தந்திம் மங்கையை மணந்த தற்கு மாறுபா டாகப் பாவி அங்கதை யறியே னானென் றவள்மகற் காசைத்தந்தே எங்களை யேய்க்கப் பார்க்குமிழிசெய லறிவேன் . கண்டாய். 90. என் மகன் பரதன் றன்னை எந்தையூர் போக்கி யன்னாள் தன்மகன் றன்னை மக்கள் தம்மொடு பழகச் செய்து மன் மகன் என்று நாட்டு மக்களு மொப்பச் செய்தென் நன் மகன் இலாத போது முடிபுனை நாளுங் கண்டாய், 91. எந்தனுக் குரிய நாட்டை எப்படி யெனைக்கேட் காதுன் முந்தவள் மகனுக் கீய முடிவுசெய் தனைய தற்கென் தந்தையை யழைக்கக் கூடத் தவிர்ந்ததென்? எனது மைந்தன் உந்தனுக் கென்ன செய்தான்? அவன் செய்த உதவி' யென்னே? 92, இப்படிப் பெற்ற பிள்ளைக் கிரண்டகம் செய்வோ முன்போல் இப்படி தன்னி லுண்டோ ! பிறந்தவர் கிரண்டகஞ்செய் தப்படி. யொருவர்க் குள்ள அரசினை யொருவர் கொள்ளற் கெப்படி பிசைந்தான் ராமன் ? இன்றையே கான் போக் கென்றாள். 98. ஏதிரி மறுக்கிற் பொல்லா ளிணங்கிடாள் போலும்; மேலும் சூதையூ ரறியச் செய்வாள்; தூற்றுவர் நாட்டு மக்கள்; மா திவள் தந்தை கேட்கின் மானம் போம்; அழகன் பாவம் ஏதில னாவான் அந்தோ! என் செய்வா னெனவுள் ளெண்ணி,