பக்கம்:இராவண காவியம்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


2

இராவண காவியம்

7.ஞாயி றன்னசொல் நாவலர் வாய்ப்பிறந்

தீயை வல்லோ ரிசையின் வளர்ந்துமுத்

தூய சங்கத் திருந்த தொழுதகு

தாயை நேர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.


8.இனித்த பாலினுந் தேனினு மின்சுவைக்

கலித்தொ கையினுங் கட்டிக் கரும்பினும்

நினைத்த வாயுஞ்சொல் நெஞ்சு மினித்திடும்

தனித்த மிழ்ப்பெருந் தாயினைப் போற்றுவாம்.


9.கனைத்து முக்கியக் கா்ருக்கு ரென்றுயிர்

இனைத்துத் தேம்பி யிடர்ப்பட லின்றியே

இனித்த வின்சுவை யோடெளி மைப்படுந்

தனைத்த குந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.


10.பூவை யோடு பொலஞ்சிறைக் கிள்ளையும்

காவி னிற்கனி யுங்கனி யச்சொலும்,

மாவும் புள்ளுமம் மாவெனு மங்கலத்

தாவி லாத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.


தமிழகம்

11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங்

கண்டு சுற்றங் கலந்து கரவிலா

துண்டு வாழ வுதவி யுலகவாந்

தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம்.


12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம்

அனைத்து முண்டு யாழியோ டாரியம்

இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள

தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம்.

தமிழ்மக்கள்

13. ஒழுக்க மென்ப துயிரினு மேலதன்

இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப்

பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர்

வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.8. நினைத்த நெஞ்சும் சொல்வர், எனக் கூட்டுக்.