பக்கம்:இராவண காவியம்.pdf/335

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


  • செய்ய

40, ஆய்மொழியுமோவென் றழுது மனக்கொண்ட காய்மொழியை நீத்துக் கதிர்வேலோய்! உங்கள் தமிழ்த் தாய்மொழிமேலாணை தமியே னபல சொலும் வாய்மொழியைக் கேட்டென் மானங்காத் தோம்புதிரே. 41. புக்க விருந்தினரைப் போன்போலப் போற்று தமிழ் மக்கள் பிறப்புரிமை வாய்ந்தகலா வின்பாலா துய்க்கவுதவுதமிழ்த் தாயோய் நும் பேருக்குத் தக்க படியுரிமை தந்தெம்மைக் காப்பீரே. வேறு 42, மன்னவர் மன்னா வென்னருங் கணவன் மனையிலா வேளைபார்த் திருந்து துன்னியும் மவரால் தனித்திருந் தேனைத் தாக்கியேன் தேரில்வைத் தடைந்தீர்? என்னயான் செய்தே னிது தமிழ் முறையோ எளியனே னுய்வழி யுண்டோ ? இன்னலுற் றெனது கணவனின் பிரிவா லிறப்பது தங்களுக் கியைபோ? 48. எளியனேன் செய்த பிழையெதோ வறியேன் இருக்கினு மப்பிழை பொறுத்தென் உளமலி காதற் கணவனை யடியாள் உற்றிடச் செய்குவீ ராயின் அளிமுர லலங்கல் துயல்வரு தோளா! அருந்தமி ழகத்தைவீட் டகன்றே வளநக ரயோத்தி செல்குவோ மிதனை மறக்குத லிறப்பினு மிலமே. 44. அன்றியு மானோ ரயலவன் மனைவி அரசிழந் தரியவெங் கானந் துன் றினம் பொல்லாத் துறவிகள் செய்த சூழ்ச்சியாற் றமிழக மதனை ஒன் றினஞ் சிறியே மொளிக்கதிர் வேலோய்! "உள்ளதை யுரைத்தன னென்னைக் கன் றிடச் சிறையில் வைப்பதால் பயனென்: காத்தருள் கெனவடி பணந்தாள். 40. அபலை-பெண், 4. அளி-வண்டு, மூசலுதல் ஒலித்தல்,