பக்கம்:இராவண காவியம்.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. வேலினும் வாளினும் மெலியத் தாக்கவே காலினுங் கடுகிய கணைப்பெ ருக்கினால் வேலையும் வாளையும் வீழ்த்திக் கையொடு மேலறுத் தருந்தொடர் விலக்கி மீண்டனன். 6. மீண்டதுஞ் சுடுகளை விடுத்துப் போக்கியே நீண்டதிங் கவட்கென நேர்ந்த தோவென ஆண்டகை மனத்திடை யையுற் றேகையில் காண்டனன் தம்பியுங் கைக லத்தலை. 7. மறவர்க ளூனையுமா வளைத்துக் கொண்டனர்? அறிவிலி கெட்ட.னன் அரிவை சொல்லினால் மறிவிழி யையகோ மாண்டி, ருப்பளே மறவர்கள் சூழ்வென மனந்து டித்துமே. 8. அம்பினா லவரையு மறுத்து மீட்டுமே எம்பிநீ யென்செய்தாய் ஏனிங் குற்றனை? கொம்பையிந் நேரமார் கொண்டு சென்றரோ? வம்புசெய் தாயடா மதியி லாதையோ, சி. ஊரென மறவர்கள் ஊங்கு சூழ்ந்தனர் பேரமர் வீட்டியான் பெயர்ந்து போந்தனன்; காரிகை யின்றொருக் காலும் வாழ்கிலேன் வீரநீ யேன் றனி விட்டு வந்தனை? 10. பெண்ணவ ளிறந்தவட் பிரிந்த துன்பினால் அண்ணிட நீதனி யாய யோத்தியை நண்ணுவை கைகயி நனியு வப்பள் ஆ! அண்ணலெக் தாய்துய ரடைவ ரென்செய்கேன். சூதுசெய் தேயெனைத் துறக்கச் செய்தனர் மா தமிழ் மறவர்கள் வஞ்சந் தீர்த்திடக், கோதையை யிதற்குளே கொன்றி ருப்பரே யா துசெய் வேனென அழுது கொண்டுபோய். 6. கால்-காற்று, தொடர்-வட்டம். 6, அவனை யும மறவர் வளைத்துக் கொண்டனர். 7, சூழ்வு -சதி. 9. மார்-ஞாயிறு திங்களை ச்சூழும் ஊர்கோன், 4 10, அண்ணிட• அவளோடிருக்க. அண்ணல்-பெருமை,