33. மறியெனு மிருவிழி மருவுங் காதொடு
நறுமண மலர்குமிழ் நலங்கொள் மூக்கையும்
உறுமண வினை புரி ஒருவற் கல்லதை
அறிகிலா வுறுப்பையும் அறுத்துக் கொன்றனர்.,
34. மூன்று பெண் களைவட முறையி லிம்மியும்
தான்றவ றாதருந் தகவி னோடறம்
போன் றுவன் கொலையது புரிந்து மேம்படு
சான்றவர் போயினார் தமிழர் வாழவே.
35. போகுறு வழியினிற் புள்ளு மாவையும்
மாகொலை 1.ரிந்து தம் வயிற்றை யோம்பியே
தோகையைக் காணுவான் தூண்டு முள்ளத்தார்
ஏகியோ ராரிய னிருக்கை யெய்தினார்.
38, எய்தியே மனைவியை இழந்து போந்ததன்
செய்தியை யுரைதரச் சிறுவ! கண்டனன்
மைதிகழ் கண்ணியை இலங்கை மன் ன வன்
கொய்தொழில் தேர்மிசைக் கொண்டு சென்றனன்.
37. நடந்ததை நினைந்துநீ நடலை கொள்ளலை
மடந்தையைப் பெறவொரு வழியுண் டென்னெனில்
உடைந்துனைப் போல சொருவன் நாடொரீஇ
அடைந்துளா னதோ தெரி யருவிக் குன்றினே.
38. மைந்தகேள் செந்தமிழ் வளர்க்கு மன்னவன்
வெந்திறல் வேலினன் வீர வா லிபின்
வந்தவன் பல்வள மருவி யோங்குகிட்
கிந்தையை யுடையசுக் கிரீவன் என்பவன்,
39, முன்னனாம் வாலியால் முனிந்து நாடொரீ இத்
துன் னெனக் கானகந் துரத்தப் பட்டவப்
பின்னவன் நட்பினைப் பெறுதல் கூடிடின்
இன்னியல் சீதையை எளிதில் மீட்கலாம்.
அரசினை யிழந்துமுன் னவனும், கஞ்சியே
உரைபெறு கிட்கிந்தை ஓருவிக் கான் வளர்
பரிசின னுறுதுணை பார்த்து வாழ்கிறான்
கரிசன மோடுமைக் கலந்து கொள்ளுவான்.
பக்கம்:இராவண காவியம்.pdf/344
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
