பக்கம்:இராவண காவியம்.pdf/388

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஓராவாகாப்பர் 23. வழுவி லாதியான் வாழவே உழுவ லன் புட னுற்றுமே கழுவி னாயுளக் கறையெனத் தழுவி மற்றுமத் தறுதலை. 24. எக்க ளிப்புட னேவலால் அக்க ளிப்புட னனுமனும் புக்க செய்தியைப் புகலவே சுக்கி ரீவனுந் துன்னினான் . 25. துன்னி ராமனைத் தொழவவன் மன்ன! சென்றனு மானுமென் இன் னு யிரினை இலங்கையில் நன்னர் கண்டி.வன் நண்ணினான். 26. இற்றை யேதமி ழிலங்கையை முற்ற வேயற முறைபெரு கிற்ற தாயகிட் கிந்தையாள் கொற்ற வாவுளங் கொள்ளுவாய். 27, என்ன வேயவு னின்னையே முன் னு போர்மணி முரசறை கென்ன வேடந் தேவலர் அன்ன ராலதை யாக்கினர். 28. போர்ப்பறைசெவி புகுதவே ஆர்ப்பெ முப்படை யாளெலாம் தார்ப்பெ ரும்.டைத் தலைவர்கள் சீர்ப்ப டப்படை திரட்டினர். 29. கள்ள மாயருங் கானிடை வள்ள லாந்தமிழ் மக்களுக் குள்ள நாளெலா மூறுசெய் மள்ள ராகிய வடவரும். 24. எக்களிப்பு-மிகு மகிழ்ச்சி , 26. பெருகிற்ற து-பெருகின து.