பக்கம்:இராவண காவியம்.pdf/392

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366 இராவண காவியம் வேறு 5, ஏவலன் றனைப்போ யழைத்துவா வென்ன ஏகியே விரைவினி லவனும் மாவலி யுடைய மதிவலி தன்னை வணங்கியே ஐயநின் றன்னைக் காவல னழைத்தா னென்னவே அவனுங் கடிதினி லெழுந்துசென் றடைந்தே ஆவலாய் வணங்கிச் சிறியனைப் பொருளா அழைத்ததே தோவென அண்ணல். 6. ஆரிய ராமன் படையொடு வந்தே அகழியின் புறத்துவிட்டுள னாம் பூரியன் தன்னைப் பொசுக்கலேற் பெனினும் பூவைகேட் டதுபிழை யாமல் சீரிலா னிடஞ்சென் றவன் கொடு மையுநந் திறமையும் பொறுமையு முரைத்து நேரினில் வந்து பணிந்திடச் சொல் லும்; நெறியிலான் மறுத்திடின் மீள்வாய். 7, இப்பெருந் தொழிற்கே யழைத்தன னுன்னை எனவதி காயனு முவந்து கப்பிய புகழோய்! இத்தொழி லெனது கடமையு முடை, மையு மன்றோ ? இப்பொழு தேயான் சென்றவற் கு.றுதி எடுத்துரைத் தழைத்திவ ணுறுவேன் சிப்பிலி தனக்கித் தனைகொலோ! என்று செருக்கியே தொழுது சென் றனனே. 8. சென்றவன் வடவர் செயலினை யெண்ணிச் சினத்தோடு முனத்தொடுங் குமரிக் குன் றென வுயர்ந்த வொளிமணி மாடக் கொடித்தெரு வகன் றுமே யிலங்கைத் துன் றுயர் கொடி. யைத் தொழுதுமே யகன்று தொடுகட லகழியைத் தாண்டி ஒன்றலர் தங்கி யுறைதரு பாடி. யுற்றனன் கொற்றவேல் தூதன். 7. சிப்பிலி- சின்னவன். 8. உனம்-உன்ன ம-கருத்து .